SELANGOR

மந்திரி புசாருடன் மாநிலத் தகவல், ஒளிபரப்புத் துறை இயக்குநர்கள் சந்திப்பு

26 ஜனவரி 2023, 1:35 AM
மந்திரி புசாருடன் மாநிலத் தகவல், ஒளிபரப்புத் துறை இயக்குநர்கள் சந்திப்பு

 ஷா ஆலம், ஜன 26 - சிலாங்கூர் மாநிலத் தகவல் துறை இயக்குநர் நார்மைசதுலக்மல் துஜாட் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியை இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று  மரியாதை நிமித்தம் சந்தித்தார். சிலாங்கூர் ஒளி,ஒலிபரப்பு இயக்குனர் ஃபைரூஸ் முகமது ரட்ஸியும் மந்திரி புசாருடன் சந்திப்பு நடத்தினார்.

மாநில மற்றும் மத்திய தகவல் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை  மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இவ்விரு தகவல் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இதன் மூலம் தகவல்களை மிகவும் திறம்படவும் ஆக்ககரமான முறையிலும்  வழங்க முடியும் என்ற மந்திரி புசார் தனது முகநூல் பதிவில் கூறினார்.

உண்மையான மற்றும் ஆகக்கடைசி  தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க அனைத்து ஊடகங்களும்  தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்களை குழப்பும் வகையில் அடிக்கடி பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் பொய்யான செய்திகளை முறியடிப்பதில் தகவல் துறையினர் முழு பங்காற்ற  வேண்டும் என்றும் அமிருடின் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.