SELANGOR

கெலெரி ஷா ஆலமில் இந்த ஞாயிற்றுக்கிழமை கலைப் பட்டறை நடைபெறவுள்ளது

25 ஜனவரி 2023, 7:38 AM
கெலெரி ஷா ஆலமில் இந்த ஞாயிற்றுக்கிழமை கலைப் பட்டறை நடைபெறவுள்ளது

ஷா ஆலம், ஜன 25: கெலெரி (galeri) ஷா ஆலமில் இந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஏற்பாடு செய்துள்ள கலைப் பட்டறையில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

காகிதச் சிற்பம் மற்றும் டூடுல் கலைப் பட்டறை அனைத்து வயதினர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதன் உதவிக் கண்காணிப்பாளர் நூர் சியாஃபிகா ஜைனல் தெரிவித்தார்.

"காகிதச் சிற்பக் கலைப் பட்டறைக்குப் பங்கேற்பதற்கான கட்டணம் RM30 மற்றும் டூடுல் கலைப் பட்டறைக்கு RM20 ஆகும்.

"பங்கேற்பு கட்டணத்தை இணையத்தின் வழி செலுத்தலாம். யாரெனும் கலந்து கொள்ளவில்லை என்றால் செலுத்தப்பட்ட பணம் திருப்பித் தரப்படாது,'' என்றார்.

இரண்டு பட்டறைகளிலும் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கான உபகரணங்களும் காலை உணவும் வழங்கப்படும் என்றார்.

நாட்டின் முன்னணி கலை ஆர்வலர்களால் நடத்தப்படும் இந்த பயிலரங்கில் ஒரு பட்டறைக்கு 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். மேலும் தகவல்களுக்கு ஜாஹிரை (017-2878379) தொடர்பு கொள்ளவும்.

ஷா ஆலம் கெலெரி ஏற்படும் செய்யும் பட்டறைகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களைப் பெற ஆர்வமுள்ளவர்கள் https://t.me/studioseni_galerishahalam என்ற என்ற இணையத்தளத்தைப் பின்தொடரலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.