SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் செத்தியா ஆலமில் நடமாடும் முகப்பிடச் சேவை

19 ஜனவரி 2023, 5:47 AM
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் செத்தியா ஆலமில் நடமாடும் முகப்பிடச் சேவை

ஷா ஆலம், ஜன 19- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடமாடும் முகப்பிடச் சேவை வரும் சனிக்கிழமை செக்சன் யு13, லோட்டஸ் செத்தியா ஆலம் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறவுள்ளது.

"ஷா ஆலம் ஆன் வீல்ஸ்" எனும் இச்சேவை  காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை  நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தகப் பொது உறவுப் பிரிவு இயக்குநர் ஷாரின் அகமது கூறினார்.

மக்கள் மாநகர் மன்ற அலுவலகங்களுக்கு வார நாட்களில் வருவதில் எதிர்நோக்கும் சிரமத்தைக் குறைத்து வார இறுதி நாட்களில் பணியை எளிதாக மேற்கொள்ள உதவும் நோக்கில் இந்த முகப்பிடச் சேவை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நடமாடும் அலுவலகம்  மதிப்பீட்டு வரியை மதிப்பாய்வு செய்து செலுத்துதல், கார் நிறுத்த அபராதங்களைச் சோதித்து செலுத்துதல், புகார் முகப்பிடம் போன்ற சேவை வழங்கும் என்று ஷாரின் அகமது ஓர்அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.