SELANGOR

ஷா ஆலம் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் தடம் தற்காலிகமாக மூடப்படும்

17 ஜனவரி 2023, 3:46 AM
ஷா ஆலம் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் தடம் தற்காலிகமாக மூடப்படும்

ஷா ஆலம் ஜன 17- ஷா ஆலம் நெடுஞ்சாலையில் உள்ள மோட்டார்

சைக்கிள் தடம் இன்று தொடங்கி இம்மாதம் 30ஆம் தேதி வரை கட்டங்

கட்டமாக போக்குவரத்துக்கு மூடப்படும்.

சாலையைச் செப்பனிடும் பணிக்காக அந்த தடத்தின் பல்வேறு பகுதிகள்

காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கட்டங் கட்டமாக

மூடப்படும் என்று கெசாஸ் சென். பெர்ஹாட் நிறுவனம் அறிக்கை ஒன்றில்

கூறியது.

அந்த மோட்டார் சைக்கிள் தடத்தைப் பயன்படுத்துவோரின் வசதி மற்றும்

பாதுகாப்புக்காக அத்தடத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும்

நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அது

தெரிவித்தது.

இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக இம்மாதம் 16 முதல் 18 வரை புக்கிட்

ரீமாவ் அடுக்குச் சாலை சந்திப்பிலிருந்து கெபுன் அடுக்குச் சாலை சந்திப்பு

வரையிலான பகுதி போக்குவரத்துக்கு மூடப்படும். கெபுன் சந்திப்பிலிருந்து

பண்டார் புத்ரி வரையிலானப் பகுதி வரும் 19ஆம் தேதி மூடப்படும்.

பண்டமாரான் முதல் பண்டார் புத்ரி சாலை சந்திப்பு வரையிலான பகுதி

26ஆம் தேதியும் பண்டார் புத்ரி முதல் கெபுன் சந்திப்பு வரையிலான பகுதி

27ஆம் தேதியும் கெபுன் முதல் புக்கிட் ரீமாவ் வரையிலானப் பகுதி 28ஆம்

தேதியும் ஹைக்கோம் முதல் சீபில்டு வரையிலானப் பகுதி ஜனவரி 30

ஆம் தேதியும் மூடப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காலக்கட்டத்தில் அச்சாலையைப் பயன்படுத்தும் மோட்டார்

சைக்கிளோட்டிகள் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும்

அதேவேளையில் அறிவிப்புகளையும் பின்பற்றி நடக்கும்படி கேட்டுக்

கொள்ளப்படுகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.