SELANGOR

``BooksFly2U`` மூலம் புத்தகம் இரவல் வழங்கும் சேவை

16 ஜனவரி 2023, 9:33 AM
``BooksFly2U`` மூலம் புத்தகம் இரவல் வழங்கும் சேவை

ஷா ஆலம், ஜனவரி 16: ``BooksFly2U`` மூலம் புத்தகம் இரவல் வழங்கும் சேவை சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தால் (PPAS) இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

புக்ஸ்ஃப்ளை2யூ என்பது தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நூலகத்தால்  உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும், மேலும் இது இக்கால கட்டத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

"இத்திட்டம் நூலகத்தின் சேகரிப்பை உறுப்பினர்கள் எளிய முறையில் அணுக உதவுகிறது.

"இந்தச் சேவை இல்லத்தரசிகள், வயதானவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் போன்ற போக்குவரத்து சிரமங்களை எதிர் நோக்கும் பயனர்கள் மற்றும் வீட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் கூட பயனளிக்கும்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

"2020 முதல் கடந்த ஆண்டு வரை, இந்த சேவையின் மூலம் 6,520 புத்தகங்கள் இரவல் வாங்கப்பட்டுள்ளன.

"பொதுமக்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டின் மூலம் 010 8491448 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்ப வேண்டும் அல்லது 03 55197667 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு இரவல் வாங்க விரும்பும் புத்தகத்தின் தலைப்பை குறிப்பிட வேண்டும்.

"அதன்பின், நூலக ஊழியர்கள் இரண்டு நாட்களுக்குள் குறிப்பிட்ட புத்தகத்தைப் பெற்று, இரவல் வாங்கியவர் முகவரிக்கு இ-ஹெய்லிங் சேவையைப் பயன்படுத்தி டெலிவரி கட்டணத்துடன் அனுப்பி வைப்பர்,`` என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.