ECONOMY

ஸ்ரீ கெம்பாங்கானில் காலணிக் கடை தீயில் அழிந்தது

15 ஜனவரி 2023, 11:34 AM
ஸ்ரீ கெம்பாங்கானில் காலணிக் கடை தீயில் அழிந்தது

கோலாலம்பூர், ஜன 15- ஸ்ரீ கெம்பாங்கான் பேரங்காடியில் செயல்பட்டு வந்த பிரசித்தி பெற்ற உயர்தர காலணி விற்பனை மையம் ஒன்று தீயில் அழிந்தது.

இத்தீச்சம்பவம் குறித்து இன்று காலை 11.39 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸ் கூறினார்.

இத்தீச் சம்பவத்தில் அந்த பேரங்காடியின் முதல் மாடியில் இருந்த அந்த காலணி விற்பனை மையம் 100 விழுக்காடு அழிந்து விட்டது. 

இச்சம்பவத்தில் ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எஞ்சியிருக்கும் தீயை முற்றாக அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

செர்டாங், பண்டார் துன் ஹூசேன் ஓன், காஜாங் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 33 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் சொன்னார்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.