SELANGOR

சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) கீழ் தாமான் மெகா காலை சந்தையின் வசதிகளை மேம்படுத்த முடிவு

14 ஜனவரி 2023, 8:17 AM
சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) கீழ் தாமான் மெகா காலை சந்தையின் வசதிகளை மேம்படுத்த முடிவு

ஷா ஆலம், ஜன. 14: இந்த ஆண்டு சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் (PSP) கீழ் தாமான் மெகா காலை சந்தையின் வசதிகளை மேம்படுத்த  திட்டமிட்டுள்ளது.

பாலகோங் எம்பி வோங் சியூ கி கூறுகையில், முன்மொழியப்பட்ட மேம்படுத்தலில் கவனம் செலுத்தப்படும் விஷயங்கள் சந்தையைச் சுற்றி கூரை கட்டுதல் மற்றும் சாலையைச் சரி செய்தல் ஆகியவை அடங்கும்.

"பிஎஸ்பி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு காலை சந்தை மேம்படுத்தல் திட்டத்திற்கான முன்மொழிவை நான் சமர்ப்பிக்கிறேன். மேற்கூரை அமைக்கும் திட்டத்துடன் சாலை பிரச்சனை குறித்தும் கவனம் செலுத்தப்படும்,'' என்றார்.

"நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் நேர்மறையான ஒத்துழைப்புடன், குடியிருப்பாளர்களின் வசதிக்காகச் சந்தையை மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.