SELANGOR

காரிலிருந்து குப்பைகளை வெளியில் வீசினால் வெ.500 அபராதம்- ஷா ஆலம் மாநகர் மன்றம் எச்சரிக்கை

13 ஜனவரி 2023, 4:57 AM
காரிலிருந்து குப்பைகளை வெளியில் வீசினால் வெ.500 அபராதம்- ஷா ஆலம் மாநகர் மன்றம் எச்சரிக்கை

ஷா ஆலம், ஜன 13- சாலைகளில் பயணிக்கும் போது காரிலிருந்து

குப்பைகளை வெளியில் வீசினால் 500 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்

என ஷா ஆலம் மாநகர் மன்றம் எச்சரித்துள்ளது.

மாநகரில் தூய்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக

இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகர் மன்றம் தனது பேஸ்புக்

பதிவில் கூறியது.

காரின் கண்ணாடி வழியாக குப்பைகளை வெளியில் வீசுவது தடை

செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களைப் புரிவோர் கண்டு

பிடிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கட்டால் 500 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்

என அது தெரிவித்தது.

1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் (சட்டம்

133) 47(1)(இ) பிரிவின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை

எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.