SELANGOR

ஸ்ரீ மூடாவில் வெள்ளத் தடுப்புப் பணிகள்- ஷா ஆலம் கவுன்சிலர் ராமு ஆய்வு

13 ஜனவரி 2023, 2:51 AM
ஸ்ரீ மூடாவில் வெள்ளத் தடுப்புப் பணிகள்- ஷா ஆலம் கவுன்சிலர் ராமு ஆய்வு

ஷா ஆலம், ஜன 13- தாமான் ஸ்ரீமூடா பகுதியில் வெள்ளப் பிரச்னைக்குத்

தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக மாநில அரசு மற்றும் ஷா ஆம்

மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு அடிப்படை வசதி மேம்பாட்டுத்

திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஜாலான் தென்தாராம் 25/84 மற்றும்

ஜாலான் ஹிட்மாட் 25/85 ஆகிய சாலைகளில் மேற்கொள்ளப்படும்

கால்வாய் சீரமைப்பு பணிகளை ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் என்.

ராமு பார்வையிட்டார்.

இந்த சீரமைப்பு பணிகள் முறையாகவும் குறிப்பிட்ட காலத்திலும்

நடைபெறுவதை உறுதி செய்யும்படி சம்பந்தப்பட்ட குத்தகையாளரை தாம்

கேட்டுக் கொண்டதாக இத்தவணைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட

உறுப்பினரான ராமு சொன்னார்.

ஸ்ரீ மூடா வட்டாரத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில்

தாம் தொடர்ந்து ஈடுபட்டு வரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த குடியிருப்பு பகுதியின் வளர்ச்சிக்கு தாம் மேற்கொண்டு வரும்

திட்டங்களுக்கு வட்டார மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தருவார்கள் என

தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.