SELANGOR

புக்கிட் காசிங் மக்கள் தங்கள் பிரதிநிதியுடன் இணைந்து தேநீர் அருந்த அழைக்கப்படுகின்றனர்

11 ஜனவரி 2023, 4:39 AM
புக்கிட் காசிங் மக்கள் தங்கள் பிரதிநிதியுடன் இணைந்து தேநீர் அருந்த அழைக்கப்படுகின்றனர்

ஷா ஆலம், ஜன 11: புக்கிட் காசிங் சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்களை தன்னுடன் இன்று தேநீர் அருந்தும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அதன் பிரதிநிதியான ராஜீவ் ரிஷ்யகரன் அழைத்தார்

மாலை 5 மணி முதல் 7 மணி வரை புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"இந்த ஆண்டு, பொது விடுமுறை நாட்களை தவிர, ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்கள் அவர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ராஜீவின் கூற்றுப்படி, தன்னைச் சந்திக்க விரும்பும் அனைத்து குடியிருப்பாளர் களையும் அவர்களின் பகுதியில் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளை முன்வைக்க அழைத்தார்.

"தங்கள் பகுதி தொடர்பான பிரச்சனைகள் முன் வைக்க அல்லது இந்நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்க அனைத்து குடியிருப்பாளர்களையும் நட்புடன் அழைக்கிறேன்,`` என்றார். மேலும், இந்நிகழ்வில் தேநீர் மற்றும் பல்வேறு சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன," குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.