SELANGOR

பொது இடத்தில் குப்பை வீசிய இருவருக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் அபராதம்

11 ஜனவரி 2023, 2:18 AM
பொது இடத்தில் குப்பை வீசிய இருவருக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் அபராதம்

ஷா ஆலம், டிச 11- கிள்ளான், தாமான் அண்டலாஸ் பகுதிகளில் பொது

இடங்களில் குப்பைகளை வீசிய இருவருக்கு கிள்ளான் நகராண்மைக்

கழகம் அபராதம் விதித்துள்ளது.

தாமான் ஸ்ரீ அண்டலாஸ், ஜாலான் ஸ்ரீ டாமாக் 17இல்

பொருத்தப்பட்டுள்ள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான

காட்சிகள் மூலம் குற்றமிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டதாக

நகராண்மைக் கழகம் கூறியது.

சம்பந்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமாகக்

குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காகக் கிள்ளான்

நகராண்மைக் கழகம் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நடவடிக்கையின் பலனாக சம்பந்தப்பட்ட பகுதியில் குப்பைகளை வீசிய

இரு நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அவர்களுக்கு எதிராக

குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன என்று நகராண்மைக்கழகம் தனது

பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இந்த குற்றத்திற்காக 1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச்

சட்டத்தின் 47(1)(ஏ) பிரிவின் கீழ் இந்நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.