SELANGOR

சபாக் பெர்ணமில் தொலைநோக்கி மூலம் வானத்தில் உள்ள பொருட்களின் அழகிய நிகழ்வைப் பார்க்கப் பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

10 ஜனவரி 2023, 6:50 AM
சபாக் பெர்ணமில் தொலைநோக்கி மூலம் வானத்தில் உள்ள பொருட்களின் அழகிய நிகழ்வைப் பார்க்கப் பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

ஷா ஆலம், ஜன. 10: ஜனவரி முழுவதும் சபாக் பெர்ணமில் உள்ள சிலாங்கூர் ஆய்வகத்தில் தொலைநோக்கி மூலம் வானத்தில் உள்ள பொருட்களின் அழகிய நிகழ்வைப் பார்க்கும் வாய்ப்பு பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் உட்பட 19 வானியல் பஞ்சாங்க நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளதாகச் சிலாங்கூர் முஃப்தி துறை அறிவித்துள்ளது.

"தொலை நோக்கியைப் பயன்படுத்தி வானியல் நிகழ்வைப் பார்க்க விரும்பும் மக்கள் சபாக் பெர்ணமில் உள்ள சிலாங்கூர் ஆய்வகத்திற்கு வருகை புரிய அழைக்கப் படுகிறார்கள்," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்வமுள்ளவர்கள் www.muftiselangor.gov.my என்ற இணைப்பில் வருகை விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.