SELANGOR

அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சிலின் (எம்பிஏஜே) சமூகத் தோட்டப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு RM40,900 ரொக்கப் பரிசு

9 ஜனவரி 2023, 4:51 AM
அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சிலின் (எம்பிஏஜே) சமூகத் தோட்டப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு RM40,900 ரொக்கப் பரிசு

ஷா ஆலம், ஜனவரி 9: இந்த ஆண்டு அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) சமூகத் தோட்ட போட்டியில் வெற்றி பெறுபவருக்கு மொத்தம் RM40,900 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

எம்பிஏஜே தலைவர் முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறுகையில், சுறுசுறுப்பான தோட்டம், பசுமையான தோட்டம், மகிழ்ச்சியான தோட்டம், தொழில்நுட்பத் தோட்டம், 3R தோட்டம், புதுமையான தோட்டம், ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான செயலில் உள்ள தோட்டம் மற்றும் பிரபலமான தோட்டம் (சிறப்பு) என 10 பிரிவுகளில் போட்டி நடைபெறும்.

"ஒவ்வொரு பிரிவின் முதல் வெற்றியாளர் RM1,000 , இரண்டாவது வெற்றியாளர் RM700 மற்றும் மூன்றாவது வெற்றியாளர் RM500 எனப் ரொக்கப் பரிசு பெறுவர். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஆறுதல் பரிசாக RM300 ரொக்கமும் அதனுடன் ஒரு பரிசும் வழங்கப்படும்.

"மேலும், இப்போட்டியில் முதன்மை இடத்தைப் பெறுபவர் RM3,000, இரண்டாம் இடம் RM2,000 மூன்றாம் இடம் RM1,000 மற்றும் நான்காவது ஐந்தாவது இடம் RM500 என ரொக்கப் பரிசுகளைப் பெறுவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பங்கேற்பு தேர்வு மூடப்பட்ட நிலையில் தற்போது இப்போட்டியில் பங்கேற்ற 39 பங்கேற்பாளர்கள் இடையே வெற்றியாளரை கண்டறிய இந்த ஆண்டு ஜனவரி 10 முதல் 19 வரை நடுவர் தேர்வு நடத்தப்படவுள்ளது.

"அனைத்து தோட்டங்களிலும் சொந்தத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய முடிந்தால், அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) சமூகத் தோட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக ஒரு படி முன்னேறி உள்ளன என்பதை உணரலாம்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.