ஷா ஆலம், ஜன 8: கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (MPK), தேர்ந்தெடுக்கப்பட்ட 64 இடங்களில் ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டியை வைக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த வசதியைப் பழைய தளவாடப் பொருட்கள் அல்லது மொத்தக் குப்பைகளை அப்புறப்படுத்த விரும்பும் கிள்ளான் நகரவாசிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய உதவுவதற்காக இச்சேவை ஜனவரி 7 முதல் 20 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வடக்கு கிள்ளான் பகுதியின் KDEB கழிவு மேலாண்மை தயாரித்துள்ள ஜனவரி 7 முதல் 20 வரையிலான அட்டவணையின்படி ரோரோ தொட்டிகளை வைப்பதற்காக மொத்தம் 64 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன,” என்று முகநூல் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஜாலான் சுங்கை கெரமாட், ஶ்ரீ செந்தோசா, ஜாலான் சுங்கை காப்பார் இன்டா, தாமான் ஶ்ரீ முத்தியரா, ஜாலான் பெருவாஸ் மற்றும் தாமான் சுமிட் ஆகிய இடங்களும் அடங்கும்.








