SELANGOR

மதிப்பீட்டு வரியைச் செலுத்த நடமாடும் கவுன்டர்கள் திறக்கப்படவுள்ளன - அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில்

6 ஜனவரி 2023, 9:33 AM
மதிப்பீட்டு வரியைச் செலுத்த நடமாடும் கவுன்டர்கள் திறக்கப்படவுள்ளன - அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், ஜன. 6: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடமாடும் கவுன்டர்களைத் திறக்க முடிவெடுத்துள்ளது. இது பொதுமக்களுக்கு மதிப்பீட்டு வரியைச் சரிபார்த்து, செலுத்துவதற்குச் சுலபமாக அமையும்.

இந்த கவுன்டர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தாமான் மூடா சந்தையிலும், ஜனவரி 14 கோலா அம்பாங் காலை சந்தையிலும் ஜனவரி 28 தாமான் டத்தோ அகமட் ரசாலி காலை சந்தையிலும்  இந்த கவுன்டர்கள் திறந்திருக்கும் என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

கூடுதலாக, https://icomm.mpaj.gov.my என்ற இணைப்பை நாடுவதன் மூலமோ அல்லது எம்பிஏஜே இன் icomm விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்வது மூலமோ பொதுமக்கள் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.

மதிப்பீட்டு வரி செலுத்துவோர் இந்த ஆண்டும் தொடரும் மதிப்பீட்டு வரி அதிர்ஸ்ட குழுக்கில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளதாக எம்பிஏஜே தெரிவித்தது. ஒவ்வொரு மாதமும் பலவிதமான கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.