SELANGOR

சிலாங்கூர் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு மாநில அரசு RM65.6 மில்லியன் ஒதுக்கியுள்ளது

4 ஜனவரி 2023, 9:56 AM
சிலாங்கூர் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு மாநில அரசு RM65.6 மில்லியன் ஒதுக்கியுள்ளது

ஷா ஆலம், ஜனவரி 4: சிலாங்கூர் பொது சுகாதார சேவையையும் அதன் தரத்தையும் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு RM65.6 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

மக்களுக்கு பல்வேறு சுகாதாரத் திட்டங்களை ஏற்பாடு செய்வதும் இந்த ஒதுக்கீட்டில் உள்ளடங்கும் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"மக்களுக்கு பொது சுகாதார தரத்தையும் அதன் சேவைகளும் மேம்படுத்தப் படுத்த  சிலாங்கூர் இத்திட்டத்திற்கு கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது.

"அவற்றில்( ஸ்கிரீனிங்) பரிசோதனை திட்டங்கள் மற்றும் மருத்துவ உதவி திட்டங்களும் அடங்கும், அதற்கு RM65.6 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது," என்று அவர் இன்று முகநூலில் ஒரு பதிவின் மூலம் கூறினார்.

பதிவில் அவர் சிலாங்கூர் பட்ஜெட் 2023 இல் ஐந்து முக்கிய விஷயங்களை வலியுறுத்தினார். கடந்த நவம்பரில் RM2.45 பில்லியனாக 2023 கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.