காஜாங், ஜன, 4- உணவக நடத்துநர்கள் மற்றும் உணவு அங்காடி வணிகர்கள்முகக்கவரி அணிவதை ஊக்குவிக்கும் முயற்சியில் காஜாங் நகராண்மைக் கழகம்
தீவிரம் காட்டவுள்ளது.
முகக் கவரி அணிவது தொடர்பான அறிக்கை கடந்த நவம்பர் மாதமே
விநியோகிக்கப்பட்டுவிட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.
அமலாக்க ரீதியில் யாருக்கும் இதுவரை குற்றப்பதிவு வழங்கவில்லை. இந்த உத்தரவை உணவகப் பணியாளர்கள் உள்ளிட்டத் தரப்பினர் பின்பற்றுவதை உறுதி செய்ய
அவர்களுக்கு நினைவூட்டல்களை மட்டுமே வழங்குகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற 2023 ஆண்டிற்கான காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூரில் உணவு சார்ந்த துறைகளில் தூய்மையை உறுதி செய்யும் நோக்கில்
உணவகப் பணியாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.
SELANGOR
உணவகத் துறையினர் முகக் கவரி அணிவதை ஊக்குவிக்கக் காஜாங் நகராண்மைக் கழகம் நடவடிக்கை
4 ஜனவரி 2023, 9:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஜோஹான் செத்தியாவில் மோசமடைந்தது காற்றின் தரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரின் மூன்று ஊராட்சி அமைப்புகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரில் காற்றுத் தரம் மேம்பட்டுள்ளது
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



