SELANGOR

வாகனங்களில் இருந்தவாறு கட்டணம் செலுத்தும் முறை- எம்.பி.கே.எல். திட்டத்திற்கு வாடிகையாளர்கள் வரவேற்பு

4 ஜனவரி 2023, 9:06 AM
வாகனங்களில் இருந்தவாறு கட்டணம் செலுத்தும் முறை- எம்.பி.கே.எல். திட்டத்திற்கு வாடிகையாளர்கள் வரவேற்பு

ஷா ஆலம், ஜன 4- கோல லங்காட் நகராண்மைக் கழகத்தினால் நேற்று

தொடங்கி அமல்படுத்தப்பட்ட வாகனங்களில் இருந்தவாறு பில்களுக்கான

கட்டணம் செலுத்தும் முறைக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து நல்ல

வரவேற்பு கிடைத்துள்ளது.

பில்களைக் கட்டுவதை எளிதாக்கும் இந்த நடைமுறைக்கு வரவேற்பு

தெரிவிக்கும் பொது மக்களின் புகைப்படங்களை நகராண்மைக் கழகம்

தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் மதிப்பீட்டு வரி உள்ளிட்ட

பில்களைக் கட்டுவதற்கு மட்டுமே இந்த முகப்பிடத்தைப் பயன்படுத்த

முடியும் என்று அது தெரிவித்தது.

இந்த முகப்பிடங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 மணி

தொடங்கி மாலை 5.00 மணி வரை நீடிக்கும் என்றும் சனி மற்றும்

ஞாயிற்றுக்கிழமைகளில் அது செயல்படாது என்றும்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.