SELANGOR

கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக ஆறு இந்தியர்கள் நியமனம்

4 ஜனவரி 2023, 4:08 AM
கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக ஆறு இந்தியர்கள் நியமனம்

ஷா ஆலம், ஜன 4- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக

உறுப்பினர்களாக இரு பெண்கள் உள்பட ஆறு இந்தியர்கள் நியமனம்

பெற்றுள்ளனர். இவர்களில் நால்வர் புதுமுகங்களாவர்.

கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக தலைமையகத்தின் மெலாவத்தி

மாநாட்டு அறையில் 2023ஆம் ஆண்டிற்கான நகராண்மைக் கழக

உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கு நேற்று நடைபெற்றது.

நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமது யாக்கோப் இஸ்மாயில்

தலைமையில் நடைபெற்ற இந்த பதவியேற்புச் சடங்கில் ஒன்பது புது

முகங்கள் உள்பட 23 நகாண்மைக் கழக உறுப்பினர்கள் பதவி உறுதி

மொழி எடுத்துக் கொண்டனர்.

நகராண்மைக் கழக உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்ட

இந்தியர்களில் என். புஷ்பா மற்றும் வி. அழகேந்திரன் ஆகிய இருவரும்

பழைய முகங்களாவர். எம். சிவபாலன், எஸ்.சுப்பிரமணியம், எஸ். நந்த

குமாரி, எஸ். ஜெகதீசன் ஆகியோர் முதன் முறையாக இப்பதவிக்கு

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கெஅடிலான், ஜசெக மற்றும் அமானா ஆகிய

கட்சிகளைப் பிரதிநிதித்து நகராண்மைக் கழகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த தவணையில் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தில் நான்கு

இந்தியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது என்பது

குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.