SELANGOR

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 23 பேர் நியமனம்

4 ஜனவரி 2023, 2:27 AM
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக 23 பேர் நியமனம்

ஷா ஆலம், ஜன 4- உலு சிலாங்கூர் நகராண்மை கழக உறுப்பினர்களாக 11

புது முகங்கள் உள்பட 23 பேர் நியமனம் பெற்றுள்ளனர். புதிதாக நியமனம்

பெற்ற உறுப்பினர்களில் உலு சிலாங்கூர் மாவட்ட ஓராங் பெசார்

முஸாபார் ராஜா டத்தோ ரெட்ஸ்வாவும் ஒருவராவார்.

இவர்கள் அனைவரும் 2023ஆம் ஆண்டு தவணைக்கான உறுப்பினர்களாக

நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது

தலைமையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த பதவியேற்புச் சடங்கில் உரையாற்றிய முகமது ஹஸ்ரி, மக்களின்

தேவை மற்றும் மாநில அரசின் கொள்கை இலக்கிற்கேற்ப நகராண்மைக்

கழகம் கொள்கைகளை வகுப்பதில் புதிதாக நியமனம் பெற் நகராண்மைக்

கழக உறுப்பினர்கள் துணை புரிவர் எனத் தாம் நம்புவதாகக் கூறினார்.

மாநில அரசு அமல்படுத்தியுள்ள மக்கள் நட்புறவுக் கொள்கைக்கேற்ப

நகராண்மைக் கழக உறுப்பினர்களும் நேர்மையுடனும் நட்புறவுடனும்

மக்களுக்கு சேவையை வழங்குவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர்

மேலும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.