SELANGOR

மகளிர், சிறார் பாதுகாப்பு இல்லங்களை நடத்துவோர் மாநில அரசின் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்

29 டிசம்பர் 2022, 3:49 AM
மகளிர், சிறார் பாதுகாப்பு இல்லங்களை நடத்துவோர் மாநில அரசின் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், டிச 29- சிலாங்கூர் மாநிலத்தில் மகளிர் மற்றும் சிறார்

பாதுகாப்பு இல்லங்களை நடத்துவோர் சிலாங்கூர் பெர்டாயா வனிதா

(டபள்யு.பி.எஸ்.) எனும் மகளிர் திறன் மேம்பாட்டுப் பிரிவிடமிருந்து

மானியத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.

மகளிர் மற்றும் சிறார் பாதுகாப்பு மையங்களை சீரமைப்பதற்கு உதவும்

நோக்கிலான இந்த நிதிக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பம்

செய்யும்படி அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது.

குடும்ப வன்முறை தொடர்பான விவகாரங்களை கவனிப்பதற்கு ஏதுவாக

அத்தகைய இல்லங்களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகளை

வழங்குவதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்த முடியும் என அது மேலும்

தெரிவித்தது.

இந்த நிதியுதவிக்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய

வேண்டும். பாதுகாப்பு இல்ல மானிய குழுவின் மதிப்பீட்டின்

அடிப்படையில் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் அதன் தொடர்பான

தகவல் சம்பந்தப்பட்ட இல்லங்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும்.

விண்ணப்ப பாரங்களை https://bit.ly/3YzhPs5 எனும் அகப்பக்கம் வாயிலாக

பதிவிறக்கம் செய்யலாம்.

மேல் விபரங்களுக்கு nurhidayah@wbselangor.com.my என்ற மின்னஞ்சல்

முகவரியில் அல்லது 03-55454879 என்ற எண்களில் நுர்ஹிடாயாவைத்

தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.