SELANGOR

 ``செலமாட் பாகி சுபாங் ஜெயா`` நிகழ்வில் பொதுமக்களுக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன - சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில்

28 டிசம்பர் 2022, 9:23 AM
 ``செலமாட் பாகி சுபாங் ஜெயா`` நிகழ்வில் பொதுமக்களுக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன - சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில்

ஷா ஆலம்,  டிச 28: இந்த ஞாயிற்றுக்கிழமை சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) ஏற்பாடு செய்த செலமட் பாகி சுபாங் ஜெயா நிகழ்வில் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

கார் பயன்பாடு இல்லா தினத்துடன் இணைந்து காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி சுபாங் பரேட் மற்றும் ஏயோன் பிக் ஷாப்பிங் மால்களுக்கு எதிரே உள்ள ஜாலான் பெர்சியாரன் கெமாஜுவானில் நடைபெறும்.

"சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம் மற்றும் மெது நடை, ஸ்ட்ரீட்பால் & கிட் ஸ்ட்ரீட் சாக்கர், வில்வித்தை மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனைகள்  போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சைக்கிள் ஓட்டும் போட்டி புதிதாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகச் சுபாங் ஜெயா சிட்டி கவுன்சிலின் (MBSJ) முகநூல் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் காலை உணவிற்கு பல்வேறு சுவையான உணவுகளை அனுபவிப்பதோடு, பாடல் போட்டிகள்,  இசைக்கலைஞர்கள் படைப்புகள் (பஸ்கிங்), சமையல் டெமோக்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.