SELANGOR

பண்டார் ரிம்பாயு கோலா லங்காட்டில், குறைந்த கார்பன் தினத்தை முன்னிட்டு பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள்

26 டிசம்பர் 2022, 8:32 AM
பண்டார் ரிம்பாயு கோலா லங்காட்டில், குறைந்த கார்பன் தினத்தை முன்னிட்டு பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள்

ஷா ஆலம், டிச. 26: அடுத்த ஜனவரி 7ஆம் தேதி பண்டார் ரிம்பாயு கோலா லங்காட்டில், குறைந்த கார்பன் தினத்தை முன்னிட்டு பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் பொதுமக்களுக்காக காத்திருக்கின்றன.

கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (MPKL), ஜாலான் ஃப்ளோரா 2, பண்டார் ரிம்பாயுவில் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை இந் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்தது.

"சாயம் பூசுதல், சந்தை, பேஷன் ஷோ, கால்பந்து, 5 கிலோ மீட்டர் தூரம் நட்பு ஓட்டம் மற்றும் குழந்தைகளுக்கான மிதிவண்டியைத் தள்ளுதல் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"அதுமட்டுமின்றி,  பறவைகளுடன் நேரத்தை செலவிடுதல் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்காக உணவு டிராக்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன," என்று முகநூல் வழி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அபிவிருத்தி திட்டமிடல் துறையை 012 300 4180 அல்லது பெருநிறுவன மற்றும் சமூக அபிவிருத்தி துறையைத் 012 300 4891 தொடர்பு கொள்ளவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.