SELANGOR

சிலாங்கூர்  புரூட் வெளியில் புதிய கவர்ச்சிகள்  கமாண்டோ-ஸ்டைல் ஷூட்டிங் ,எக்ஸ்ட்ரீம் ஷூட்டர்  விளையாட்டுகள்

26 டிசம்பர் 2022, 8:23 AM
சிலாங்கூர்  புரூட் வெளியில் புதிய கவர்ச்சிகள்  கமாண்டோ-ஸ்டைல் ஷூட்டிங் ,எக்ஸ்ட்ரீம் ஷூட்டர்  விளையாட்டுகள்

ஷா ஆலம், டிசம்பர் 26: கமாண்டோ-ஸ்டைல் ஷூட்டிங் சவால் அல்லது எக்ஸ்ட்ரீம் ஷூட்டர், சிலாங்கூர் புரூட் வெளிக்கு (SFV) மக்களை ஈர்க்கும் புதிய அம்சங்களாக சேர்க்கப் பட்டுள்ளன.

இந்த பள்ளி விடுமுறை காலத்திலிருந்து பார்வையாளர்களுக்கு இந்த நடவடிக்கை திறந்திருக்கும் என்று முகநூல் மூலம் வேளாண் சுற்றுலா மையம் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் புரூட் வெளி  இப்போது உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுள்ளது. கமாண்டோ-ஸ்டைல் எக்ஸ்ட்ரீம் ஷூட்டர் நடவடிக்கையில் ஈடுபட்டு இங்கு பல நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்,"

பெஸ்டாரி ஜெயாவில் அமைந்துள்ள இவ்விடம் ஒவ்வொரு சனி முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

மேலும் தகவலுக்கு 012-3432971 அல்லது 016-6880792 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது selangorfruitvalley@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடலாம்.

அக்டோபர் முதல், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுச் சீட்டின் விலை, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு RM15 ஆகவும், பெரியவர்களுக்கு RM20 ஆகவும் உள்ளது.

சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு டிக்கெட்டுகள் RM30 ஆகவும், பெரியவர்கள் RM35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.