SELANGOR

உலு சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங்கில் உள்ள 51 பகுதிகளுக்கும் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டது

25 டிசம்பர் 2022, 2:31 AM
உலு சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங்கில் உள்ள 51 பகுதிகளுக்கும் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டது

ஷா ஆலம், டிச 25: ஜாலான் புக்கிட் பெருந்துங்கில் உடைந்த குழாயைச் சரிசெய்யும் பணியால் தடைப்பட்ட நீர் விநியோகம், உலு சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங்கில் உள்ள 51 பகுதிகளுக்கும் மாலை 5.45 மணி அளவில் முழுமையாக சீரமைக்கப்பட்டது.

திட்டமிடப்படாத நீர் விநியோகம் தடை பட்ட நேரம் முழுவதும் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்காகப் பயனர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறது பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம்.

நேற்று காலை 11 மணி முதல் உடைந்த குழாயைச் சீரமைக்கும் பணி நடைபெற்றதால் உலு சிலாங்கூரில் 51 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத்தடை ஏற்ப்பட்டது.

ஜாலான் புக்கிட் பெருந்துங்கில் குழாய் வெடித்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உலு சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.