SELANGOR

குழாய் உடைந்ததால் உலு சிலாங்கூரில் 52 இடங்களில் நீர் விநியோகத் தடை

23 டிசம்பர் 2022, 4:07 AM
குழாய் உடைந்ததால் உலு சிலாங்கூரில் 52 இடங்களில் நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், டிச 23- ஜாலான் புக்கிட் பெருந்தொங் பகுதியில் இன்று

குழாய் உடைந்ததைத் தொடர்ந்து உலு சிலாங்கூர் வட்டாரத்தின் 52

இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

உடைந்த குழாய்களைச் சரி செய்யும் பணி இன்று காலை 11.00 மணி

தொடங்கி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாதகப் பெங்குருசான் ஆயர்

சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இந்த நீர் விநியோகத் தடை தொடர்பான சமீபத்திய நிலவரங்கள் ஊடங்கள்

வாயிலாக அவ்வப்போது பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று

அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

பொது மக்கள் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் பேஸ்புக்,

இண்ட்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக நீர்

விநியோகம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளலாம் என்பதோடு

15300 என்ற எண்களில் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் பொது உறவு

மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.