SELANGOR

 'எக்ஸ்ப்ளோரேஸ் பூசிங் கோலா லங்காட் டூலு` போட்டியின் வெற்றியாளருக்கு ரிம 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்

22 டிசம்பர் 2022, 6:56 AM
 'எக்ஸ்ப்ளோரேஸ் பூசிங் கோலா லங்காட் டூலு` போட்டியின் வெற்றியாளருக்கு ரிம 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்

ஷா ஆலம், டிச 22: டிசம்பர் 31 அன்று நடைபெறும் 'எக்ஸ்ப்ளோரேஸ் பூசிங் கோலா லங்காட் டூலு` நிகழ்வில் முதல் இடத்தைப் பெறுபவருக்கு ரிம 2,000 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

ஒவ்வொரு அணிக்கும் பங்கேற்பு கட்டணம் RM100 மற்றும் 30 குழுக்கள் மட்டுமே பங்கேற்க முடியும் எனக் கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (MPKL) தெரிவித்தது.

"இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள், ஏனென்றால் பங்கேற்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 26 ஆகும்.

"பங்கேற்கhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLScYTpvKUETwk1mXYw5jb2cZQVVNSRdC4gr3GG29Bh9S_aGn7w/viewform?usp=sharing இணைப்பைக் கிளிக் செய்யவும் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு முதல் (RM2,000), இரண்டாவது (RM1,000), மூன்றாவது (RM500), நான்காவது (RM300) மற்றும் ஐந்தாவது (RM200) எனும் பரிசு தொகைகள் வழங்கப்படும்.

"இந்நிகழ்வு காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இஸ்தானா பணடார் ஜுக்ரா, கோலா லங்காட்டில் நடைபெறும்.

"பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 03 3180 3694 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்," என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.