SELANGOR

மாற்றுத் திறனாளிகள், மூத்தக் குடிமக்கள் மருத்துவமனைக்குச் செல்ல இலவசப் போக்குவரத்து வசதி- எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாடு

22 டிசம்பர் 2022, 4:12 AM
மாற்றுத் திறனாளிகள், மூத்தக் குடிமக்கள் மருத்துவமனைக்குச் செல்ல இலவசப் போக்குவரத்து வசதி- எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாடு

ஷா ஆலம், டிச 22- மாற்றுத் திறனாளி அட்டை வைத்திருப்போர் மற்றும்

மூத்தக் குடிமக்கள் சிகிச்சைக்காக அரசாங்க மருத்துவமனைகளுக்குச்

செல்ல ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) இலவசப் போக்குவரத்து

வசதியை ஏற்படுத்தித் தருகிறது.

மாநகர் மன்றத்தின் இந்த சமூக வாகனச் சேவை திங்கள் முதல் வெள்ளி

வரை காலை 8.30 தொடங்கி மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்படும்.

ஷா ஆலம், செக்சன் 7 மற்றும் செக்சன் 19 சுகாதார கிளினிக்குகள்,

கிள்ளான், புக்கிட் கூடா சுகாதாரக் கிளினிக், சுங்கை பூலோ சுகாதாரக்

கிளினிக், ஷா ஆலம் பெரிய மருத்துவமனை, கிள்ளான் அம்புவான்

ரஹிமா மருத்துவமனை பெட்டாலிங் ஜெயா, மலாயாப் பல்கலைக்கழக

மருத்துவ மையம் ஆகிய இடங்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என்று

மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள

விளக்கப்படத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த இலவசப் போக்குவரத்து வசதியைப் பெற விரும்புவோர் 03-55222732

என்ற தொலைபேசி எண்களில் மாநகர் மன்றத்தின் சமூக மேம்பாட்டுத்

துறையைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.