SELANGOR

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தளவாடப் பொருட்கள் அகற்றும் திட்டம் - பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில்

20 டிசம்பர் 2022, 6:48 AM
சீனப் புத்தாண்டை முன்னிட்டு தளவாடப் பொருட்கள் அகற்றும் திட்டம் - பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில்

ஷா ஆலம், டிச 20: பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் (MBPJ), அடுத்த மாதத் தொடக்கத்தில் சீனப் புத்தாண்டு 2023 யை முன்னிட்டு வீட்டு தளவாடப் பொருட்கள் அகற்றும் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

31 டிசம்பர் 2022 முதல் 15 ஜனவரி 2023 வரை 'ஸ்பிரிங் கிளீனிங்' திட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக உள்ளூர் அதிகார சபை (பிபி) தெரிவித்துள்ளது.

"காலை 10 மணிக்குள் பொருட்களை வீட்டின் முன் வைக்க வேண்டும். அந்த நேரத்தை விட தாமதமானால், அப்பொருள்கள் மீண்டும் வசூல் செய்யப் படாது, ”என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் தகவல்களுக்கு நீங்கள் பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சிலின் MBPJ திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்தம் துறையை 03-79541440 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.