ஷா ஆலம், டிச 20- மாநிலத்தின் மூன்று தொகுதிகளில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை இன்றுநடைபெறுகிறது.
ஜாலான் இண்டா 1, தாமான் புக்கிட் இண்டா (கின்ராரா தொகுதி), பிளாட் காசிங்
இண்டா, செக்சன் 5/4,பெட்டாலிங் ஜெயா (புக்கிட் காசிங் தொகுதி), தாமான் மெனாரா மாஜூ, கிள்ளான் (செந்தோசா தொகுதி) ஆகிய இடங்களில் காலை 10.00
மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த மலிவு விற்பனை நடைபெறும்.
இந்த விற்பனையில் தலா 10.00 வெள்ளி விலையில் 500 கோழிகளும் ஒரு தட்டு 10.00 வெள்ளி என்ற விலையில் 300 தட்டு முட்டைகளும் தலா 10.00 வெள்ளி விலையில் 300 பேக் இறைச்சியும் விற்பனைக்கு வைக்கப்படும்.
இவை தவிர, 300 பாக்கெட் கெம்போங் மீன்(வெ.6.00), பத்து வெள்ளி விலையில் 300 பேக் அரிசி, 150 போத்தல் 5 கிலோ சமையல் எண்ணெய் (வெ.25.00) ஆகிய
அத்தியாவசிய உணவுப் பொருள்களும் இங்கு விற்கப்படும்.
இவற்றோடு ஏசான் பி.கே.பி.எஸ். தயாரிப்புகளான கோதுமை மாவு, மிளகாய் சாந்து, சார்டின், பிஸ்கட், மீ உள்ளிட்ட பொருள்களும் மலிவான விலையில் விற்கப்படுகிறது.
மாநில அரசின் இந்த மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை linktr.ee/myPKPS
என்ற அகப்பக்கம் வழி அறிந்து கொள்ளலாம்.
SELANGOR
செந்தோசா உள்பட மூன்று தொகுதிகளில் இன்று மலிவு விற்பனை
20 டிசம்பர் 2022, 5:03 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஜோஹான் செத்தியாவில் மோசமடைந்தது காற்றின் தரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரின் மூன்று ஊராட்சி அமைப்புகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரில் காற்றுத் தரம் மேம்பட்டுள்ளது
Media Selangor Team
13 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



