SELANGOR

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் தீபாவளி உபசரிப்பு இரு ஆதரவற்ற இல்லங்களுக்குத் தலா 1,000 வெள்ளி நிதியுதவி

12 டிசம்பர் 2022, 3:45 AM
சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் தீபாவளி உபசரிப்பு இரு ஆதரவற்ற இல்லங்களுக்குத் தலா 1,000 வெள்ளி நிதியுதவி

சுபாங் ஜெயா, டிச 11- சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டிலான

தீபாவளி விருந்து நிகழ்வு இம்மாதம் 9ஆம் தேதி இங்குள்ள சுபாங் ஜெயா

மாநகர் மன்றத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார்

தலைமையேற்ற இந்த நிகழ்வில் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர்

ஏசிபி ஏ. அன்பழகன், டிஎஸ்பி. பிரகாஷ், சுபாங் ஜெயா, சமூக நல அதிகாரி

ஏ.ராமச்சந்திரன் மாநகர் மன்ற உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள்,

பணியாளர்கள், மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனப் பிரதிநிதிகள் உள்பட

சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

இந்த விருந்து நிகழ்வின் சிறப்பு அங்கமாக இரு ஆதரவற்றோர்

இல்லங்களுக்கு தலா 1,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டதாக நிகழ்வின்

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எஸ்.தமிழரசு கூறினார்.

இந்நிகழ்வில் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தில் பணிபுரியும் சுமார் 70

இந்திய பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக தலா 100 வெள்ளி

வழங்கப்பட்டது என்று மாநகர் மன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

மாநகர் மன்ற இந்திய பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக ஏற்பாடு

செய்யப்பட்ட இந்த விருந்து நிகழ்வில் சிறப்பு அங்கமாக கலைநிகழ்ச்சியும்

இடம் பெற்றது என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.