SELANGOR

புத்தக விழாவை முன்னிட்டு கேள்வி-பதில் போட்டி- 10 வெற்றியாளர்களுக்கு வெ.100 பரிசு

8 டிசம்பர் 2022, 6:42 AM
புத்தக விழாவை முன்னிட்டு கேள்வி-பதில் போட்டி- 10 வெற்றியாளர்களுக்கு வெ.100 பரிசு

ஷா ஆலம், டிச 8- இங்கு நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டு சிலாங்கூர் அனைத்துலக புத்தக விழாவை முன்னிட்டு கேள்வி-பதில் போட்டிக்கு கோத்தா அங்கிரிக் சட்டமன்றத்  தொகுதி ஏற்பாடு செய்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் இன்று மாலை 3.00 மணி தொடங்கி  @NajwanHalimi எனும் தனது ட்விட்டர் பதிவில் கேட்கப்படும் எளிதான கேள்விகளுக்கு பதிலளித்து பரிசு வெல்லலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இப்போட்டியில் சரியான பதிலைக் கூறும்  தேர்ந்தெடுக்கப்பட்டப் பத்து பேருக்கு தலா 100 வெள்ளிக்கான புத்தக பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

எனது ட்விட்டர் பக்கத்தை வலம் வாருங்கள். எளிதான கேள்விகளுக்குப் பதில் தாருங்கள். சரியான விடையை விரைவாகத் தருவோருக்குப் பரிசு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோர் வரும் 10ஆம் தேதி காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் புத்தகக் கண்காட்சி  நடைபெறும் ஷா ஆலம் மாநாட்டு மையத்திற்கு வந்து பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

இந்தச் சிலாங்கூர் அனைத்துலகப் புத்தக விழா இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்கள் பதிப்பகத்தார் கலந்து கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.