ஷா ஆலம்,நவ 28- நாட்டில் நேற்று 2,022 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ள ன. இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 86 ஆயிரத்து 294 ஆக உயர்ந்துள்ளது.கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகம் உள்ள நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 27,207 ஆகும் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இதில் 361 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர், சபா, திரெங்கானு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளதை அமைச்சின் தரவு காட்டுகிறது.
மாநிலம் மற்றும் பிராந்திய வாரியாக கோவிட்-19 விவரம் வருமாறு:
சிலாங்கூர் (768)
கோலாலம்பூர் (159)
சபா (154)
கெடா (148)
பினாங்கு (134)
மலாக்கா (128)
சரவாக் (87)
கிளந்தான் (81)
பேராக் (75)
பகாங் (65)
நெகிரி செம்பிலான் (59)
திரெங்கானு (55 ) )
புத்ராஜெயா (54)
ஜோகூர் (37)
லாபுவான் (10)
பெர்லிஸ் (8)
ECONOMY
நாட்டில் நேற்று 2,022 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று- நால்வர் பலி
28 நவம்பர் 2022, 11:18 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
தேசிய குறைக்கடத்தி முதலீட்டு நிதிக்கு சிலாங்கூர் RM50 மில்லியன் பங்களிப்பு
Bernama
10 அக்டோபர் 2026

national
2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்: 459.84 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
Media Selangor Team
9 அக்டோபர் 2026

selangor
சிலாங்கூர் படைப்பாற்றல் பொருளாதாரத் திட்டம்: பாதேக் துறைக்கு முன்னுரிமை
Siti Rohaizah Zainal
26 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



