ECONOMY

காருடன் மோதல்- ஆற்றில் தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி பரிதாப மரணம்

28 நவம்பர் 2022, 5:29 AM
காருடன் மோதல்- ஆற்றில் தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி பரிதாப மரணம்

சிரம்பான், நவ 28- காருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாலத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி  ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம்  ஜாலான் நீலாய்- பாஜம் சாலையில் நீலாய் நகரில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் நிகழ்ந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அப்துல் மாலிக் ஹஷிம் கூறினார்.

சுமார் 30 மீட்டர் உயரம் கொண்ட அப்பாலத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அந்த 18 வயது ஆடவர் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் சொன்னார்.

பண்டார் பாரு நீலாயிலிருந்து பாஜாம் நோக்கி அந்த கார் வந்து கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தடம் மாறி காருடன் நேருக்கு நேர் மோதியாக அவர் தெரிவித்தார்.

அந்த விபத்தின் எதிரொலியாக அந்த மோட்டார் சைக்கிளோட்டி ஆற்றில் வீசியெறியப்பட்டார். காரை ஓட்டிய 29 வயது ஆடவர் காயமின்றி உயிர்த்தப்பினார் என அவர் குறிப்பிட்டார்.

இவ்விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.