ECONOMY

மலேசிய கிண்ண கால்பந்து- சிலாங்கூர்-ஜே.டி.டி. இறுதியாட்டத்திற்கு தேர்வு

22 நவம்பர் 2022, 2:17 AM
மலேசிய கிண்ண கால்பந்து- சிலாங்கூர்-ஜே.டி.டி. இறுதியாட்டத்திற்கு தேர்வு

கோல நெருஸ், நவ 22- இங்குள்ள சுல்தான் மிஸான் ஜைனால் அபிடின் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற மலேசிய கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் திரங்கானுவை சிலாங்கூர் எப்.சி. குழு தோற்கடித்தது.

இதன் வழி 3-2 என்ற ஒட்டுமொத்த கோல் கணக்கில் அது இறுதியாட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. இந்த வெற்றியின் வழி சிலாங்கூர் அணி இறுதியாட்டத்தில் ஜோகூர் டாருள் தாக்சிம் (ஜே.டி.டி.) குழுவை சந்திக்கவுள்ளது.

சுமார் 33,000 ரசிகர்களுடன் சொந்த அரங்கில் களம் இறங்கிய திரங்கானு குழு சிலாங்கூர் குழுவுடன் கடுமையான பலபரீட்சையில் ஈடுபட்டது. ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற வேளையில் 3-2 என்ற மொத்த கோல்எண்ணிக்கையில்  இறுதியாட்த்திற்கு தகுதி பெற்றது.

சிலாங்கூர் குழு ஆகக்கடைசியாக கடந்த  2016 ஆம் ஆண்டு மலேசிய கிண்ண இறுதியாட்டத்திற்கு தேர்வானது. அப்போட்டியில் கெடா குழுவிடம் அது தோல்வி கண்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.