ECONOMY

சிலாங்கூரில் பெரும்பாலான தொகுதிகளை ஹராப்பான் கைப்பற்றியது

20 நவம்பர் 2022, 3:00 AM
சிலாங்கூரில் பெரும்பாலான தொகுதிகளை ஹராப்பான் கைப்பற்றியது

ஷா ஆலம், நவ 20- சிலாங்கூரில் பெரும்பாலான தொகுதிகளை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றியது. எனினும் காப்பார், உலு சிலாங்கூர், கோல லங்காட் ஆகிய தொகுதிகள் பெரிக்கத்தான் நேஷனலிடம் கைநழுவிப் போயின.

மேலும், தேசிய முன்னணியின் கோட்டைகளாக விளங்கிய சபாக் பெர்ணம் மற்றும் தஞ்சோங் காராங் ஆகிய தொகுதிகளையும் பெரிக்கத்தான் நேஷனல் கைப்பற்றியது.

கடந்த 2018 பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணியில் இருந்த போது வெற்றி பெற்ற சுங்கை புசார் தொகுதியை பெரிக்கத்தான் இம்முறையும் தக்க வைத்துக் கொண்டது.

இதனிடையே, ஷெரட்டோன் நகர்வின் மூலம் பக்கத்தான் கூட்டணிக்கு துரோகமிழைத்து கட்சி தாவிச் சென்ற டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி மற்றும் ஜூரைடா கமாருடின் ஆகியோரை கோம்பாக் மற்றும் அம்பாங் தொகுதி மக்கள் தோற்கடித்து உரிய தண்டனையை வழங்கியுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.