ECONOMY

எங்கும் குப்பைகள்- பெரிக்கத்தான் நேஷனல் கூட்டத்திற்கு பிறகு அலங்கோலமானது எம்.பி.ஏ.ஜே. திடல்

15 நவம்பர் 2022, 6:45 AM
எங்கும் குப்பைகள்- பெரிக்கத்தான் நேஷனல் கூட்டத்திற்கு பிறகு அலங்கோலமானது எம்.பி.ஏ.ஜே. திடல்

ஷா ஆலம், நவ 15- தாமான் கிராமாட், ஏயு1 எம்.பி.ஏ.ஜே. திடலில் பெரிக்கத்தான் நேஷனல் நேற்று நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பிறகு அந்த திடல் குப்பைகளால் நிரம்பி அலங்கோலமாக காணப்பட்டது.

அக்கட்சி ஆதரவாளர்கள் விட்டுச் சென்ற  காகிதங்கள், பிளாஸ்டிக், மீந்துபோன உணவுகள், கொடிகள் திடல் முழுவதும் காணப்பட்டன. அந்த திடல் முழுவதும் குப்பைகள் நிறைந்துள்ளதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன.

டிடிஎம் என்பவர் டிக்டாக் செயலி வழி பகிர்ந்து கொண்ட காணொளியில் அந்த திடலில் குப்பைகளும் ஆங்காங்கே நாற்காலிகளும் கிடப்பதை காண முடிந்தது.

பொறுப்புடன் பிரசாரம் செய்யுங்கள். பெரிக்கத்தான் நேஷனல் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். திடல் சேதமடைந்து விட்டதோடு அங்கு குப்பைகளும் நிறைந்து காணப்படுகின்றன என்று அந்த செயலில் பதிவிடப்பட்டுள்ளது.

அதே திடலில்  வரும் நவம்பர் 16ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு பிரசாரக் கூட்டத்தை நடத்த ஹராப்பான் கூட்டணி முன்பு திட்டமிட்டிருந்தது. எனினும், தற்போது ஏயு2 டேவான் செர்பகுணாவுக்கு அந்த கூட்டம் மாற்றப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.