கோலாலம்பூர், நவ. 7: இங்குள்ள ஜாலான் ராஜா மூடா மூசாவில் உள்ள கம்போங் பாரு வாயில் அருகே நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து நாசமானது.
இரவு 8.19 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக அவரது தரப்புக்கு அவசர அழைப்பு வந்தது என்று மூத்த செயல்பாட்டு கமாண்டர் உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் ரஹ்மாட் கமாருல்ஜமான் கூறினார்.
தித்திவாங்சா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், செந்தூல், ஜாலான் துன் ரசாக் மற்றும் ஹாங் துவா மற்றும் அவசர சேவை உதவி பிரிவைச் சேர்ந்த மொத்தம் 36 உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
"ஐந்து கதவுகள் கொண்ட வீடு 90 விழுக்காடு எரிந்துவிட்டது. சுற்றியுள்ள வீடுகளை குளிர்விப்பதன் வழி உஷ்ணம் தணிக்கபட்டு தீ அணைக்கப்பட்டது.
"இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை, தீக்கு காரணம் மற்றும் இழப்புகள் மதிப்பீடு இன்னும் விசாரணையில் உள்ளது," என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.








