ECONOMY

வெற்றி பாதையை நோக்கி டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி

6 நவம்பர் 2022, 11:39 AM
வெற்றி பாதையை நோக்கி டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி
வெற்றி பாதையை நோக்கி டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி

கோம்பாக்,நவம்பர்.6- கோம்பாக் தொகுதியில் வெற்றி பாதையை நோக்கி பக்காத்தான் ஹராப்பான், கோம்பாக் தொகுதி வேட்பாளரான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அதிகாலை 4.30 மணி தொடங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மக்கள் எங்களை முழுமையாக நம்புகிறார்கள், அதற்காக  நன்றி  தெரிவிக்கும் வண்ணம்,  தான்  மக்களுக்காக  இன்னும் கடுமையாக  உழைக்க சித்தம் கொண்டிருப்பதாக,   உலு கிள்ளான் டத்தாரான் அருகே டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று மேற்கொண்ட பிரச்சாரத்தில்  தெரிவித்தார்.

22 மாதம் நாங்கள் என்ன செய்தோம் என்பதை விட இத்தனை ஆண்டு நீங்கள் என்ன செய்தீர்கள்? போதும் மக்கள் ஏமாந்தது என்று அவர் கூறினார்.

மேலும் இத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளேன். அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டால் நமக்கு சிறப்பான வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

ஹராப்பான் கூட்டணியின் கோட்டையாக விளங்கும் கோம்பாக் தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆர்.பார்த்திபன்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.