ECONOMY

பெக்கான் பாரு செர்டாங்கில் தீ விபத்து- 13 கடைகள் சேதம்

31 அக்டோபர் 2022, 3:55 AM
பெக்கான் பாரு செர்டாங்கில் தீ விபத்து- 13 கடைகள் சேதம்

கோலாலம்பூர், அக் 31- பெக்கான் பாரு செர்டாங், ஜாலான் பாசாரில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு நகைக்கடை உள்பட 13 வணிக மையங்கள்  கடுமையாகச் சேதமுற்றன.

பலகை மற்றும் சிமெண்டினால் கட்டப்பட்ட அந்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து,  இன்று அதிகாலை 4.15 மணியளவில் தாங்கள் தகவலைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்  இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.

செர்டாங், பாங்கி பண்டார் துன் ஹூசேன் ஓன், செக்சன் 7 ஆகிய நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் பத்து நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது அக்கடைகள் 70 விழுக்காடு தீயில் அழிந்துள்ளதைக் கண்டதோடு தீ வெகு விரைவாக அருகிலுள்ள கடைகளுக்கும் பரவியதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்பட்டவில்லை. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.