ECONOMY

கார் நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் 10 வெள்ளியாக குறைப்பு- காஜாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு

28 அக்டோபர் 2022, 9:32 AM
கார் நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் 10 வெள்ளியாக குறைப்பு- காஜாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு

ஷா ஆலம், அக் 28- காஜாங் நகராண்மைக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கார் நிறுத்தக் கட்டணக் குற்றங்களுக்கான அபராதத் தொகை 10.00 வெள்ளியாக குறைக்கப்  படுகிறது.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு குற்றங்களுக்கான அபராதத் தொகையில் 90 விழுக்காடு வரை கழிவும் வழங்கப்படுவதாக நகராண்மைக் கழகம் கூறியது.

கார் நிறுத்தக் குற்றங்களுக்கு குறைந்த பட்சம் 10 வெள்ளி அபராதம், சிறு குற்றங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றங்களுக்கு 90 விழுக்காடு வரையிலான கழிவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அது தெரிவித்தது.

இந்த அபராதக் தொகைக்கான சலுகை வரும் நவம்பர் 1 முதல் 30 வரை அமலில் இருக்கும். நீதிமன்ற நடவடிக்கைகளுக்குட்பட்ட குற்றங்களுக்கு இந்த சலுகை பொருந்தாது எனவும் அது தெளிவுபடுத்தியது.

இந்த அபராதத் தொகை சலுகை தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் 03-87377899 என்ற எண்களில் அல்லது www.mpkj.gov.my  என்ற அகப்பக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.