ECONOMY

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் உதவித் திட்ட அறிமுக நிகழ்வு  சிப்பாங்கில் நாளை நடைபெறும்

28 அக்டோபர் 2022, 7:49 AM
ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் உதவித் திட்ட அறிமுக நிகழ்வு  சிப்பாங்கில் நாளை நடைபெறும்

ஷா ஆலம், அக் 28- புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் இரண்டாம் கட்டப் பயணத் தொடர் சிப்பாங்கில் இம்மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறும்.

“மேன்மையான வாழ்வுக்கான உத்தரவாதம்“ எனும் கருப்பொருளிலான இந்த திட்டம் கேஐபி சென்ட்ரல், கோத்தா வாரிசானில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள், இலவச மருத்துவப் பரிசோதனை, அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனை, கண்காட்சி ஆகியவை இடம் பெறும்.

இவை தவிர, அதிர்ஷ்டக் குலுக்கு, அம்பு எறியும் போட்டி, பேய் வீடு, சிறார்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, வீரதீர சைக்கிளோட்ட நிகழ்வு, பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் உணவு விற்பனை ஆகிய அங்கங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் திறந்து வைக்கப்படும் இந்த நிகழ்வில் சமூக மற்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களுடனான கலந்துரையாடல் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.