ஷா ஆலம், அக் 19- சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேபிஎஸ்) ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைப் பயணம் மேலும் ஒன்பது இடங்களில் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தொடர்கிறது.சபாக், ஜெராம், சுங்கை துவா, பாண்டன் இண்டா, தெராத்தாய், கம்போங் துங்கு, செமெந்தா, சிஜாங்காங் மற்றும் சுங்கை பீலேக் ஆகிய தொகுதிகளில் இந்த அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை நடைபெறும்.
இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 10.00 ரிங்கிட்டுக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 ரிங்கிட்டுக்கும் மீன் ஒரு பாக்கெட் 6.00 ரிங்கிட்டுக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 ரிங்கிட்டுக்கும் விற்கப்படும்.
இந்த அத்தியாவசிய பொருள் மவிவு விற்பனை கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மாநிலத்தின் 56 சட்டமன்றங்களில் உள்ள 160 இடங்களில் இந்த மலிவு விற்பனை
நடத்தப் படுகிறது. சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனையின் வழி இதுவரை 80,000 பேர் வரை பயனடைந்துள்ளனர்.
ஏசான் ரக்யாட் மலிவு விற்பனை பயணம் பற்றிய தகவலை https://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கம் மூலமும் பெறலாம்.
ECONOMY
பாண்டான் இண்டா, தெராத்தாய் தொகுதிகளில் நாளை மலிவு விற்பனை
19 அக்டோபர் 2022, 9:41 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைeconomy
உங்கள் கருத்து என்ன?



