ஜோகூர் பாரு, அக் 16- ஒரு லோரி மற்றும் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இருவர் கருகி மாண்டதோடு நால்வர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினார்.இந்த கோர விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 45.7வது கிலோ மீட்டரில் செடனாக்கில் நேற்றிவு 7.47 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் ஒரு இசுஸூ லோரி மற்றும் மூன்று கார்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி முகமது பவுசி நோர் கூறினார்.
இந்த விபத்தின் எதிரொலியாக ஏற்பட்ட தீவிபத்தில் புரோட்டோன் வீரா காரில் பயணித்த நூருள் நஷிஹா கமாருள் அரிபின் (வயது 28) கருகி மாண்டார்.
டோயோட்டா வியோஸ் காரில் பயணம் செய்த அடையாளம் தெரியாத மற்றொரு ஆடவரும் இவ்விபத்தில் காலமானதாக அவர் தெரிவித்தார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட லோரி 70 விழுக்காடு தீயில் அழிந்ததாகவும் அதன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களான எஸ்.சுரேஷ் (வயது 28) மற்றும் மாக் யூ ஜியான் (வயது 22) ஆகியோர் காயமின்றி உயிர்த்தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புரோட்டோன் வீரா மற்றும் டோயோட்டா வியோஸ் கார்கள் 90 விழுக்காடு தீயில் சேதமடைந்தன. இதர இரு கார்களின் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பினர்
ECONOMY
நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் தம்பதியர் கருகி மரணம்
16 அக்டோபர் 2022, 10:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைeconomy
உங்கள் கருத்து என்ன?



