ECONOMY

இரு படகுகள் மோதல்- ஒரு மீனவரைக் காணவில்லை

5 செப்டெம்பர் 2022, 4:24 AM
இரு படகுகள் மோதல்- ஒரு மீனவரைக் காணவில்லை

கோத்தா திங்கி, செப் 5- இங்குள்ள ஜாலான் கெரிசி, கம்போங் சுங்கை செம்பயோங்கில் நேற்று மாலை இரண்டு படகுகள் மோதிய விபத்தில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.11 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பத்து பேரடங்கிய தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக

கோத்தா திங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி  ரஃபி ஏ கரீம் கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்த போது முறையே நான்கு மற்றும் ஒன்பது மீட்டர் நீளம் கொண்ட இரண்டு படகுகள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்துள்ளதை மீட்புக் குழு உறுதிப்படுத்தியது.

அந்த விபத்தின் காரணமாக அந்த நான்கு மீட்டர் படகில் இருந்த 29 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆடவர்கள்  ஆற்றில் தூக்கியெறியப்பட்டனர்.

அந்த மோதலின் விளைவாக ஆற்றில் விழுந்த  35 வயதான ஆடவர் இன்னும் காணப்படவில்லை. மற்ற இருவரும் பொதுமக்களால் மீட்கப்பட்டனர். காயமடைந்த ஒருவர் தஞ்சோங் செடிலி சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு சிவிலியன் படகுகளை பயன்படுத்தி நீரின் மேற்பரப்பில் முதல் கட்டத் தேடுதல்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்  மேலும் கூறினார்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.