ECONOMY

முகக்கவசம் அணிவது தொடர்பான புதிய விதிமுறை புதனன்று வெளியிடப்படும்

4 செப்டெம்பர் 2022, 5:59 AM
முகக்கவசம் அணிவது தொடர்பான புதிய விதிமுறை புதனன்று வெளியிடப்படும்

ஷா ஆலம், ஆக 4- முகக் கவசம் அணிவது தொடர்பான புதிய விதிமுறை கூடினபட்சம் வரும் புதன் கிழமைக்குள் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பான நிபுணர்களின் பரிந்துரையை தமது தரப்பு கடந்த வாரம் பெற்று விட்டதாக அவர் சொன்னார்.

பொது சுகாதார நிர்வாக செயல்குழுவின் கூட்டம் எனது தலைமையில் கடந்த  வாரம் நடைபெற்றது. முகக்கவசம் தொடர்பான நிபுணர்களின் பரிந்துரையை நான் பெற்றுள்ளேன். இதன் தொடர்பில் பொது மக்களின் கருத்தைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பான அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவேன். வரும் புதன் கிழமை வாக்கில் அதனை வெளியிடுதற்கு சாத்தியம் உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

2022 ஆம் ஆண்டிற்கான தேசிய நிலையிலான உடல் உறுப்பு தான விழிப்புணர்வு வாரத்தை முடித்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.