ECONOMY

டத்தாரான் ஷா ஆலமில் இன்று தேசிய தினக் கொண்டாட்டம்- பொது மக்கள் பங்கேற்க மந்திரி புசார் அழைப்பு

30 ஆகஸ்ட் 2022, 6:23 AM
டத்தாரான் ஷா ஆலமில் இன்று தேசிய தினக் கொண்டாட்டம்- பொது மக்கள் பங்கேற்க மந்திரி புசார் அழைப்பு

ஷா ஆலம், ஆக 30- இன்றிரவு இங்கு நடைபெறும் சிலாங்கூர் மாநில நிலையிலான 65வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்கும்படி சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷா ஆலம், டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறும் இந்த தேசிய தினக் கொண்டாட்டத்தில் அணிவகுப்பு மற்றும் கலைஞர்களின் படைப்புகளும் சிறப்பு அங்கமாக இடம் பெறும் என்று அவர் சொன்னார்.

“வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றுபட்டு தேசிய தினத்தைக் கொண்டாடுவோம்“ என்று நேற்று இங்குள்ள டி பல்மா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

இந்த தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது பொருளாதார மற்றும் பணவீக்கம் காரணமாக பிரச்னையை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் மந்திரி புசார் வெளியிடுவார்.

இவ்வாண்டு மாநில நிலையிலான தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு ‘கித்தா சிலாங்கூர் தெகோ பெர்சாமா‘ எனும் கருப்பொருளை சிலாங்கூர் தேர்ந்தெடுத்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.