ECONOMY

வீடு புகுந்து திருடும் கும்பல் முறியடிப்பு- இரு பெண்கள் உள்பட ஐவர் கைது

23 ஆகஸ்ட் 2022, 9:34 AM
வீடு புகுந்து திருடும் கும்பல் முறியடிப்பு- இரு பெண்கள் உள்பட ஐவர் கைது

சிரம்பான், ஆக 23- இம்மாதம் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நெகிரி செம்பிலான் மற்றும் கெடாவின் பல்வேறு பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் இரு பெண்கள் உள்பட ஐந்து உள்நாட்டினரை கைது செய்த போலீசார், வீடு புகுந்து திருடும் மற்றும் ஆரம்பரக் கார்களை கொள்ளையிடும் ‘மோலேக்வேய்‘ கும்பலை முறியடித்தது.

டோயோட்டா ஹைலக்ஸ், வியோஸ், ஹோண்டா மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட ஐந்து கார்கள் கொள்ளையிடப்பட்ட தில் 31 முதல் 41 வயது வரையிலான இக்கும்பல் உறுப்பினர்களுக்கு தொடர்புள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்லான் காலிட் கூறினார்.

இது தவிர, சுமார் ஐந்து லட்சம் வெள்ளி மதிப்புள்ள மதுபானங்கள், கைபேசிகள், மடிக்கணினிகள், டிஜிட்டல் கேமராக்கள் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையிடுவதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

இக் கும்பலைச் சேர்ந்த சிலர் வீடு புகுந்து திருடும் வேளையில் அப்பொருட்களை வாங்குவோரை இடைத்தரகர்கள் செயல்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் அடையாளம் காணும் பணியில் இதர உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கும்பல்  நெகிரி  செம்பிலான், கோலாலம்பூர், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.