ECONOMY

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

13 ஆகஸ்ட் 2022, 8:12 AM
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆடவர் சடலம் மீட்பு

கோல சிலாங்கூர்,  ஆக 13 - உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன்  ஆடவர் ஒருவர்  புஞ்சாக் ஆலாம் ,  தாமான் ஆலாம் ஜெயாவில் இறந்து கிடந்தார்.

நேற்று காலை மணி  11.40 அளவில் ஆடவர் ஒருவர்   இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததைத்  தொடர்ந்து போலீசார் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர்.  ஆலம் ஜெயா  தொழில் பேட்டைப் பகுதியிலுள்ள   கடை வரிசைப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக   கோல சிலாங்கூர்  மாவட்ட  போலீஸ்  தலைவர்   சூப்பிரிண்டன்ட்  ரம்லி காசா தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த  கோல சிலாங்கூர்  போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த தடயவியல் அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டதோடு கொலைக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களையும் கண்டுபிடித்தனர்.

அந்த ஆடவரின் உடலில்  துப்பாக்கிச் சூட்டு காயங்களும் காணப்பட்டதாக   சூப்பிரிடெண்டன் ரம்லி காசா தெரிவித்தார். அதோடு அந்த அவரது  யமஹா  மோட்டார் சைக்கிளும் சம்பவ இடத்தில்  கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.