ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றினால் 4,860 பேர் பாதிப்பு- 10 பேர் மரணம்

30 ஜூலை 2022, 5:19 AM
கோவிட்-19 நோய்த் தொற்றினால் 4,860 பேர் பாதிப்பு- 10 பேர் மரணம்

ஷா ஆலம், ஜூலை 30- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று உயர்வு கண்டு 4,86 ஆக ஆனது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,926 ஆக இருந்தது.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்க்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 72 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளதாக கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

தற்போது மொத்தம் 48,300 பேர் இந்நோய்த் தொற்றின் தீவிரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 46,334 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 23 பேர் பி.கே.ஆர்.சி. மையங்களிலும் 1,883 பேர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 60 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய பத்து மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,956 ஆக அதிகரித்துள்ளது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.